--- --:--:-- --

மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை..!

2

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சித்திரவல்லி கிராமத்தில் மின் கம்பம் விழுந்து படுகாயமடைந்த அந்த சிறுமி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததால் தனது போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon