--- --:--:-- --

கொலையாளி முகத்தை ஏன் மறைத்து வந்தீர்கள் என வாக்குவாதம்..!

3

கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொன்ற கொலையாளி சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை தாக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சதீஷை வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர்.

 

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளி முகத்தை ஏன் மறைத்து வந்தீர்கள் என சில வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புழல் சிறைக்கு கொலையாளி சதீஷ் அழைத்துச் செல்லப்படுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon