--- --:--:-- --

மனைவி குடிக்க பணம் தர மறுத்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

8

திருப்பூர் அருகே குடிக்க பணம் தர மறுத்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மதன்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

 

மதுவுக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே செல்வி வெளியூர் செல்வதற்காக புறப்பட்ட பொழுது அவரது கணவர் மதன்குமார் குடிக்க பணம் கேட்டுள்ளார். செல்வி பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து வீடு திரும்பிய மனைவி கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon