--- --:--:-- --

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பள்ளி மாணவிகள் காயம்..!

9

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். எடப்பாடி சின்னமுத்து ஊரிலுள்ள பூந்தளிர் காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி உள்ளனர்.

 

இவர்கள் தினம்தோறும் ஒரு வேனில் எடப்பாடி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரெட்டிபட்டி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று விட்டு மாலையில் அதே காப்பகத்திற்கு வருவார்கள்.

 

வியாழக்கிழமை மாலை பள்ளியில் இருந்து மாணவிகளை அழைத்துக்கொண்டு காப்பகத்திற்கு வந்த வேன் கனமழை பெய்ததால் நிலைதடுமாறி விவசாய வயலுக்குள் சாய்ந்து விபத்திற்குள்ளானது.

 

இதில் வேன் ஓட்டுநர் ஆனந்தராஜன், இருபத்தி மூன்று மாணவிகளும் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon