பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவிகள்..!
சேலத்தில் மகளிர் சிறப்பு பேருந்தில் கல்லூரி மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு வரும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சுமார் 2000 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலர் அரசியல் கட்டணமில்லா பேருந்தில் பள்ளிக்கு வருகின்றனர். இவர்கள் பேருந்தில் ஆபத்தான முறையில் வருவதை தவிர்க்க நடத்துனர்கள் அறிவுறுத்தியும் அதை மாணவிகள் கடைபிடிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கல்லூரி நேரத்தில் புதிய பேருந்துகள் இருந்தும் கட்டணம் இல்லை என்பதால் இலவச பேருந்தில் வரும் மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





