வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது..!
கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரை சேர்ந்த சரண்யா என்பவர் இளம்பெண் ஒருவருடன் கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அந்த இளம்பெண்ணை மஞ்சு என்பவரிடம் ஒப்படைத்த நிலையில் அவரை சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 4 பேர் அந்த பெண்ணை பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




