மண்ணுக்குள் இருந்து வந்த தங்கபாம்பு..!
கேரளாவில் 142 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணுக்குள் இருந்து தங்க கவசவாலன் பாபு வெளிவந்துள்ளது. தங்க கவச வாலன் பாம்பு வெளிவந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே ஒரு மலை உள்ளது.
இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் சிலர் வனப்பகுதியில் மண்ணை தோண்டி கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்குள் இருந்து வித்தியாசமாக இருந்த பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மண்ணுக்குள் இருந்து வந்த தங்க கவச வாலன் என்கிற அதிசய பாம்பை பிடித்தனர். இது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தங்க கவசம் என்னும் இந்த பாம்பு 142 ஆண்டுகளுக்குப் பின்னர் வனப்பகுதியில் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
கடந்த 1880ம் ஆண்டு இதே போல் ஒரு பாம்பு பிடிபட்டது. கோல்டன் சில்டு என்று அந்தப் பாம்பை ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். மிகவும் ஆபூர்வமாக இருக்கக்கூடியது. சூரிய வெளிச்சத்தில் இந்த பாம்பை பார்த்தால் தங்கம் போல ஜொலிக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




