--- --:--:-- --

அடி பம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்ததால் அதிர்ச்சி..!

3

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கள்ளச்சாராய ரைடுக்கு சென்ற போலீசார் அடி பம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூசி படிந்து வருவதாக முதலில் நினைத்த போலீசாருக்கு பின்னர் கள்ளச்சாராயம் என்பது தெரியவந்துள்ளது.

 

நிலத்தை தோண்டி பார்த்தபோது இரண்டு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் சாராயத்தை பதுக்கி வைத்து தேவைப்படும்போது பம்பை அடித்து பாலிதீன் கவரில் பிடித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon