--- --:--:-- --

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!

7

கேரளாவில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதிக்கு 13 வயதில் மகன் இருந்துள்ளார்.

 

டெக்னீஷியன் வேலை பார்த்த ஜெயக்குமார் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஜெயக்குமார் மகனையும் கொலை செய்ய முயன்றுள்ளார்.

 

ஆனால் மகன்பின்வாசல் வழியாக ஓடி விட்டதால் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டதுடன் சமையலறையிலிருந்து கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளார்.

 

சில நிமிடங்களில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகிய நிலையில் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு தப்பியோடிய மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon