பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி தற்கொலை செய்துகொண்ட பெண்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாதை பிரச்சினை காரணமாக தன் மீதும் தன் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புண்படுத்துவதாக கூறி கோகிலா என்ற பெண் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் நடைபெற்ற கோட்டாட்சியர் விசாரணையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததை எடுத்து தற்கொலை செய்துகொண்ட கோகிலாவின் உடல் அவரது சொந்த ஊரில் காவல் துறையினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





