நான்கு கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக் குட்டி..!
நான்கு கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக் குட்டியை கைக்குழந்தையை போல் பாலூட்டி வளர்த்து வருகிறார் மூதாட்டி. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வளர்த்து வரும் ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது.
அந்த குட்டிகளில் ஒன்று ஆரோக்கியமாகவும் மற்றொன்று நான்கு கால்கள் இல்லாமல் ஊனமாகப் பிறந்தது. இதையடுத்து மூதாட்டி கூறுகையில் குடும்பத்தில் கணவர் மகன்கள் என அனைவரையும் இழந்து பல வருடங்களாக யாரும் இல்லாத வெறுமையான வாழ்க்கையை இந்த கால்நடைகளை ஒரே உறவு என வளர்த்து வருகிறேன்.
என்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு வளர்ப்பில் கறவை மாடுகள் வழங்கினால் எவ்வித தடையுமின்றி அனைத்தையும் தன்னுடைய குழந்தைகள் போல வளர்ப்பேன் என அந்த பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





