அறந்தாங்கியை சேர்ந்த இளைஞர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு..!
தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்று அறந்தாங்கியை சேர்ந்த இளைஞர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள செய்யாறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.
எம்பிஏ பட்டதாரியான இவர் காரைக்குடியை சேர்ந்த ஒரு ஏஜென்ட் மூலம் கடந்த மே மாதம் தாய்லாந்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலைக்காக சென்ற அவருக்கு வேறு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேள்வி கேட்ட செல்வகுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பிறகு வேறு வழியில்லாமல் செல்வகுமாரின் குடும்பத்தினர் நகைகளை விற்று பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் இதுவரை நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





