சிறப்பு வகுப்புக்கு வராத மாணவியை அடித்த தலைமை ஆசிரியை..!

திருப்பூர் அருகே சிறப்பு வகுப்புக்கு வராத மாணவர்களை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடுமலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரின் இரண்டு மகள்களும் வாழப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

 

இதனால் சிறப்பு வகுப்புக்கு வராததால் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து விசாரணை நடத்துமாறு கோகிலா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நீதிமன்ற உத்தரவின்படி தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.