பாலிவுட் நடிகை ஜாக்குலினை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத் துறை முடிவு..!
இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலினை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரசேகர் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே பலமுறை ஜாக்குலினுடன் விசாரணை நடத்தியுள்ளனர். ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொந்தமான 7.7 கோடி ரூபாய் பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மோசடியாக சம்பாதித்த பணத்தில் 5.7 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





