அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி விசாரணைக்கு வந்தபோது ஓ பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி விசாரணை நடத்தி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் நீதிபதி தீர்ப்பளிப்பார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




