ஏர்போர்ட்டில் கோபமடைந்த நடிகர் ஷாருக்கான்..!
விமான நிலையத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மகன்களை ஒன்றாக கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது ஒரு ரசிகர் ஷாருக்கானுடன் வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க முயன்றார்.
இது தனக்கு பிடிக்காமல் தனது கையை அசைத்துவிட்டு பின்னால் வந்த ஷாருக்கான் அந்த நபரிடம் கோபத்தை காட்டினார். அப்போது அவரது மகன் ஷாருக்கானை அமைதிப்படுத்த முயன்றார். இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





