--- --:--:-- --

செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய நபர் கைது..!

5

அரியலூர் அருகே கணவரைப் பிரிந்து தனியே வசித்து வரும் டியூஷன் ஆசிரியையை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர். ஜெயம் கொண்ட பகுதியை சேர்ந்த பெண் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில் பள்ளி சிறுவர்களுக்கு அபாகஸ் வகுப்பு எடுத்து வருகிறார்.

 

அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒரு நான்காம் நபர் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த பெண் எச்சரித்தும் தொடர்ந்து அழைத்து தொந்தரவு கொடுத்ததால் பெண் போலீசில் புகார் அளித்தார்.

 

இதனையடுத்து செல்போன் எண்ணை டிரேஸ் செய்த போலீசார் கடாரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் வேறொரு நபரிடம் இருந்து செல்போனை வாங்கி பெண்ணை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon