--- --:--:-- --

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு..!

5

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த வழக்கில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர். விஜயமாநகரம் கிராமத்தில் நேற்று இரவு சாலையில் கோவிந்தராஜ் என்பவரின் 3 வயது பெண் குழந்தை மலர்விழி விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் குழந்தை மீது மோதி நீண்டநேரம் இழுத்துச் சென்றதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது.

 

எட்டாம் வகுப்பு சிறுவன் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவனை அவனது தந்தை சிவகுருவின் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அலட்சியமாக மரணத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon