தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுச்சேரி என்னும் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை ஒரிசா அருகே வலுவிழக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





