--- --:--:-- --

மூதாட்டியிடம் திருட முயன்ற வட மாநில இளைஞர் உயிரிழப்பு..!

6

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் திருட முயன்ற வட மாநிலங்களை சேர்ந்த அந்த பகுதி மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மூதாட்டி தனியாக இருந்ததை அறிந்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் மூவர் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றனர்.

 

அப்பொழுது மூதாட்டி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொள்ளையனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். மற்ற இருவர் தப்பி ஓடினர். விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த திருடனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon