வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி மற்றும் வட தமிழகத்தில் ஞாயிறு முதல் புதன்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் பத்தாம் தேதி வரை மணிக்கு 65 கிலோமீட்டர் வரை காற்று வீசிக் கொண்டிருந்தது என்றும் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





