--- --:--:-- --

குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு தாயும் தற்கொலை ..!

3

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு தாயும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அமராவதி அருகே அவரது மனைவி சரளாவிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் மன உளைச்சலில் இருந்த சரளா நள்ளிரவில் குழந்தைகளை அழைத்துச் சென்று விவசாய கிணற்றில் போட்டுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

வீட்டில் சரளாவையும் குழந்தைகளையும் காணவில்லை என்று தகவல் அறிந்ததும், விரைந்து வந்த காவல்துறையினர் கிணற்றில் உடலை கண்டு மீட்டனர். மேலு ம்தேடுதலுக்கு பிறகு குழந்தைகளின் உடலும் மீட்கப்பட்டன. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon