ஏமாற்ற நினைத்த காதலனால் விஷமருந்தி மரணம் வரை சென்ற காதலி..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஏமாற்ற நினைத்த காதலனால் விஷமருந்தி மரணம் வரை சென்று காதலித்து திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகரைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண்ணும் தொரவலூர் கிராமத்தை சேர்ந்த அருண் ராஜ் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனை அறிந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டுள்ளார். வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்ததால் ஷாலினியை திருமணம் செய்ய ஏற்க மறுத்துள்ளார்.
விரக்தியடைந்த அவர் காதலன் முன்னே விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





