திருமணமாகிய நான்கு மாதத்தில் மகளை காணவில்லை என பெற்றோர் புகார்..!
திருவள்ளூர் அருகே திருமணமாகிய நான்கு மாதத்தில் மகளை காணவில்லை என பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தமிழ்ச்செல்வியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சுற்றுலாத்தலமான மலைப்பகுதியில் தமிழ்ச்செல்வியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் தனது மகளை காணவில்லை என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




