--- --:--:-- --

கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!

5

சென்னை பெருங்குடியில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். வீட்டில் உள்ள ஏழு அடி ஆழமுள்ள கிணற்றில் உள்ள கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை அழைத்து வந்துள்ளனர்.

 

உரை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது காளிதாஸ் விஷவாயு தாக்கி மயங்கினார். அவர் மயங்கியதை கண்ட சரவணன் அவரை காப்பாற்ற முயன்ற போது கால் இடறி விழுந்து அவரும் தலையில் அடிபட்டு மயங்கினார்.

 

தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதித்து பார்த்ததில் இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon