கர்ப்பிணி பெண்ணை டோலி சென்று தூக்கிட்டு சென்ற அவலம்..!
திருப்பூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள செட்டில்மென்ட் பகுதியில் சாலை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. அங்கு இருக்கக்கூடிய கரடுமுரடான மலைப் பகுதி என்பதால் சாலை வசதி மின்சார வசதி இல்லை என்பதால் அங்குள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் கர்ப்பிணி பெண் ஒருவரை தோளில் டோலி கட்டி சுமந்து செல்லும் அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர முடியாத சூழலை அடுத்து அங்கு இருந்த கர்ப்பிணி பெண்ணை தோளில் டோலி கட்டி சுமந்து சென்று மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்ற காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




