17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கிராம நிர்வாக உதவியாளர்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுமியை கடத்தி சென்று அவருக்கு தெரியாமல் மதுவைப் புகட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கிராம நிர்வாக உதவியாளர் முருகேசன் என்பவரும் 16 வயது சிறுமி ஒருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




