இளம்பெண்ணை தும்பிக்கையால் தட்டி எழுப்பிய யானை..!
உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை தும்பிக்கையால் தட்டி எழுப்பிய யானையின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது.
சுற்றுலா போன்ற நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நாட்டில் வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி யானைகள் நிறைந்த நாட்டில் ஹலோ ரிசார்ட் ஒன்றில் தங்கி இருக்கும் விருந்தினர்களை காலை நேரம் அலாரத்திற்குப் பதிலாக யானையைக் கொண்டு எழுப்பும் வினோத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




