வழுக்கை தலையில் முடி வளர மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்கவில்லை..!
வழுக்கை தலையில் முடி வளர மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு செலவுடன் இழப்பீடு தொகை வழங்குமாறு தனியார் நிறுவனத்திற்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு சென்னையில் உள்ள நிறுவனத்தில் தலையில் முடி வளர சிகிச்சை மேற்கொண்டார். 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் நான்காயிரம் முடிகள் நடப்பட்டன.
இரண்டு மாதங்களில் முடிகள் முளைக்கும் எனவும் 25 ஆண்டுகள் உத்திரவாதம் அளிப்பதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முடி வளராத நிலையில் வேதனையடைந்த ஸ்டாலின் 2020 ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக செலவு தொகையையும் அவரது மன உளைச்சலுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குமாறு உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




