அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
பைடன் தன் குழந்தை பருவத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதி வீடுகளில் ஜன்னல்களில் படியும் எண்ணெயால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது பெரும்பாலானோருக்கு புற்றுநோய் இருந்த நிலையில் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வருடத்திற்கு முன்பு தோல் புற்றுநோய் இருந்ததாகவும் அவர் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பாகவே சிகிச்சைகள் மூலம் புற்று நோய் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




