நிலத்தகராறில் தாய்-மகள் மீது ஆசிட் வீச்சு..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நிலத்தகராறில் பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசித்த தாய்-மகள் மீது ஆசிட்டை வீசியுள்ளார். காட்டாக்கடை பகுதியில் அருகருகே உள்ள இரு வீட்டார் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒரு பெண்மணி ஆசிட் திரவத்தை தாய் மகள் மீது ஊற்றினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




