அடுத்த நான்கு நாட்களுக்கு பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். 25 ஆம் தேதி திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




