உடலை வாங்க பெற்றோர் தரப்பு முன்வராததால் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடல்..!
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவுபெற்ற நிலையில் உடலை வாங்க பெற்றோர் தரப்பு முன்வராததால் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 3 மணிநேர மறுபிரேத பரிசோதனை நடைபெற்றது. மறு பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் பிரேத பரிசோதனையில் பெற்றோர்கள் யாரும் இல்லாத நிலையில் உடலை வாங்க முன்வராததால் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நோட்டீஸ்
ஒட்டியுள்ளனர்.





