அதிமுகவின் பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள்..!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டை உடைத்து கதவை தள்ளி உள்ளே ஆதரவாளர்கள் நுழைந்துள்ளனர். சட்டப்படி பொதுக்குழுவை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து தீர்மானம் வழங்கப்படுகிறது. இரட்டைத்தலைமையை ரத்து செய்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படும்.
பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்ய வேண்டும். அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்ட அரசியல் வரலாற்றில் வெற்றிகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு வலியுறுத்தல். மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிக்கவிக்கப்படும். 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




