கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை..!
தெலுங்கானாவில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் நீர் நிலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகள் தெலுங்கானாவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




