--- --:--:-- --

3 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி..!

6

குடியாத்தம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

 

கடத்தலுக்கு உறுதுணையாக இருந்ததாக கூறி அந்த இளைஞரின் தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். காணாமல் போன மாணவி மற்றும் இளைஞர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon