வாகனத்தை முந்த முயன்ற போது நடந்த விபரீதம்..!
கிருஷ்ணகிரியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே ஒரு வழிச்சாலையில் முன்னால் சென்ற பைக்கை முந்த முயன்ற போது எதிரே வந்த பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் ஸ்கூட்டியில் வந்த பெண் உட்பட அவரது மகன் ஆகியோரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த பெண் என்எஸ்கேநகர் பகுதியைச் சேர்ந்த பேபி என தகவல் வெளியாகியுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கை முந்த முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





