விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வன்மையாக கண்டிப்பதாகவும், கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





