--- --:--:-- --

பைக் பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக்..!

7

கேரளாவில் பைக் பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதிய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கீழையூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கோட்டையூர் பகுதியில் உள்ள நேற்றைய தினம் குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

வழியில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பாலகிருஷ்ணன் குடும்பத்தோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் ஒரு பைக் கட்டுப்பாட்டை இழந்து காரின் பின் பகுதியில் நின்ற பாலகிருஷ்ணன் மீது மோதியது.

 

இதில் பாலகிருஷ்ணனின் இரண்டு கால்களும் முறிந்து போயின. பைக் ஓட்டி வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon