விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு!
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் NINI 2 சீரியலில் தனது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என சொல்லி திடீரென வெளியேறினார்.
அதற்கு பின் கலர்ஸ் தமிழில் “இது சொல்ல மறந்த கதை” என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரச்சிதா. அவர் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




