--- --:--:-- --

அமலா பாலை திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்..?

12

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர். கடைசியாக அவர் ஆடை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் படத்திற்க்கு பிறகு அவருக்கு கைவசம் எதுவும் பெரிய படங்கள் இல்லை.

 

தற்போது ஆன்மீகத்தில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பாண்டிசேரியில் அவர் ஆண் நண்பர் உடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் செய்திகள் முன்பு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று ரசிகர்கள் உடன் இன்ஸ்டாவில் உரையாடிய அவர் பல கேள்விகளுக்கு பதில் கூறினார். “உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும்?” என ஒரு ரசிகர்கள் கேள்வி கேட்க, “அதை நானே கண்டுபிடிக்கவில்லை, உண்மையாக தான். நான் என்னையே புரிந்துகொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அதை நான் கண்டுபிடித்தபின் கண்டிப்பாக சொல்கிறேன்” என அமலா பால் கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon