3 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை..!
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், இந்த மூன்று நாட்களும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





