தனது 12வயது மகனை கொலை செய்து குளத்தில் வீசிய தந்தை..!
சூதாட்டத்திற்கு அடிமையாகி பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கோலார் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார்.
சூதாட்டத்திற்கு அடிமையான இவர் கடந்த ஐபிஎல் போட்டியின் போது ஏராளமான பணத்தை கடனாக வாங்கி பெட்டிங்கில் ஈடுபட்டு அனைத்தையும் தோற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடைக்கு வந்து திருப்பி கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அப்போது கடையில் இருந்த மணிகண்டன் 12 வயது மகன் நடந்த விஷயங்களை தாயிடம் கூறியுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மகன் மீது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
நடமாட்டம் இல்லாத பகுதியில் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து குளத்தில் வீசி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





