சிக்கனலில் நின்ற காரில் கேட்ட அலறல்..!
சென்னையில் வட்டிக்கு கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராத நபரை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை சூளைமேடு சுரங்கப்பாதை சென்ற போது காரின் கதவை திறந்து ஒரு நபர் செல்வதாக கூச்சலிட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் அந்த காரை மடக்கி நடத்திய போது காரில் இருந்த 4 நபர்களில் இருவர் தப்பி ஓடினர். அதை தொடர்ந்த காலத்தில் இருந்து கூச்சலிட்ட நபர் உட்பட இரண்டு நபர்களை அழைத்து சென்று சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் சூளைமேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கூச்சலிட்ட நபர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த மற்றொரு நபர் கோயம்பேடு பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பதும் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக நண்பருடன் சேர்ந்து சிவகுமாரை கடத்தியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





