--- --:--:-- --

நேருக்கு நேர் பேருந்தின் மீது மோதிய இருசக்கர வாகனம்..!

5

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஸ் மற்றும் மோகன்ராஜ் இருவரும் புதுச்சேரியிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் அதி வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon