--- --:--:-- --

புதிய தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி..!

3

கோர்ப்வெக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல் நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது.

 

இந்த தடுப்பூசி 5 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டராக செலுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

 

கோவாக்ஸின் அல்லது கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு டோசையும் செலுத்தி ஆறு மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ப்வெக்ஸ் தடுப்பூசியின் விலை 840 ரூபாயிலிருந்து 205 ரூபாயாக குறைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon