தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை தொடரும்..!

மிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.

 

இருப்பினும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமைகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.