அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் ஒன்று பயணிகளுடன் தலைகீழாக நின்றது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பூங்காவில் தலைகீழாக தொங்கும் ராட்டினம் திடீரென பழுதாகி விட்டது.
ராட்டினம் தலைகீழாக நின்ற நிலையில் அதன் பயணத்தை சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் பூங்கா ஊழியர்கள் பழுதை சரி செய்து கீழே கொண்டு வந்தனர்.