போட்டோவுக்கு போஸ் கொடுக்க தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பிய பாலையா… !

போஸ் கொடுக்க ரசிகரின் குழந்தையை நடிகர் பாலகிருஷ்ணா அடித்து எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் பாலகிருஷ்ணா சற்று முரட்டுத்தனமான ஆள் தான். அடிக்கடி ரசிகர்களை அடித்து மிரட்டுவார். குழந்தை ஒன்றை அவர் அடித்துள்ளார்.

 

ஆனால் இது சற்று அன்பான அடியாகும். ஆந்திர மாநிலத்துக்கு ஒரு தொகுதி எம்எல்ஏவான நடிகர் பாலகிருஷ்ணா தன் ரசிகர் மன்ற தலைவர் வீடு புதுமனை புகுவிழாவில் பங்கேற்றார். அப்பொழுது ரசிகர்கள் பலர் பாலகிருஷ்ணாவுடன் போட்டோ எடுத்தனர்.

 

புகைப்படம் எடுக்க வந்த தந்தையின் தோளில் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. நடிகர் பாலகிருஷ்ணா குழந்தைக்கு இரண்டு அடி போட்டு கண் விழிக்க வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.