செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்க்கும் அவலம்..!

பீகாரில் மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் இல்லாததால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவசர சிகிச்சை மேற்கொண்டனர் . பீகார் மாநிலத்தில் சாரா மாவட்டத்தில் சதார் மருத்துவமனையில் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

 

மருத்துவமனையில் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
.